வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் இ-சேவை மையம் இயங்கி வந்தது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த இ-சேவை மையம் செயல்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் ஆதார் அட்டையில் திருத்தம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி விரைந்து இ-சேவை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டியது அவசியம்.