புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா கதிராமங்கலம் ஊராட்சியில் உள்ள சடையமங்கலம் ஏரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதகு திறக்கப்பட்டது. இதிலிருந்து வெளியேறிய தண்ணீரால் அருகிலிருந்த சாலையில் முழுவதுமாக அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளும், மாணவர்களும் இந்த சாலை வழியாக செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த பகுதியை கடந்து செல்ல பாலம் அமைத்து தர வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.