சமயபுரம் நால்ரோட்டில் 2 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் எப்போதும் மதுபிரியர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். இங்கு மதுவாங்கி குடிக்கும் சிலர் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர். இதனால் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் குறிப்பாக, பெண் பக்தர்கள் முகம் சுழித்தவாறு, மிகுந்த அச்சத்துடனும் செல்லும் அவல நிலை உள்ளது. தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கும் வகையில் சமயபுரம் நால்ரோட்டில் உள்ள 2 அரசு மதுபான கடைகளையும் உடனடியாக இடம் மாற்றம் செய்ய வேண்டும், கள்ளத்தனமாக மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்