வாகன ஓட்டிகள் அவதி

Update: 2025-02-09 13:31 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம் பேரளி ஊராட்சி மருவத்தூர் கிராமத்தில் பகல் மற்றும் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகளையும் கடிக்க துரத்துவதினால் அவர்கள் பயத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் தெருநாய்கள் இரவு நேரத்தில் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்வதினால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்