தெருநாய்கள் தொல்லை

Update: 2025-02-09 09:18 GMT


திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் வந்து செல்கிறனர். பஸ் நிலையத்திற்குள் கடந்த சில நாட்களாக தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மத்திய பஸ் நிலையத்திற்குள் சுற்றித்திரியும் தெருநாய்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜ்குமார், திருப்பூர்.

மேலும் செய்திகள்