பொதுமக்கள் அவதி

Update: 2025-02-09 09:02 GMT

அருமனை அருகே குழிச்சல் கிராமத்தில் கிளை தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தின் அருகில் மின் இணைப்புடன் கூடிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடிநீர் தேவைக்காக இந்த தொட்டியை பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குடிநீர் தொட்டியின் மின் இணைப்பு பழுது காரணமாக குடிநீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி குடிநீர் தொட்டியின் மின் இணைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்