சீரமைக்க வேண்டும்

Update: 2025-02-09 08:57 GMT

குழித்துறை நகராட்சியின் அருகில் சிறுவர்கள் விளையாடுவதற்காக பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து இங்குள்ள உபகரணங்களில் விளையாட செய்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்து காணப்படுகிறது. இதனால், பூங்காவிற்கு வரும் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குழந்தைகளின் நலன்கருதி சேதமடைந்த விளையாட்டு உபகரணங்களை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்