மதுரை நகர் பை பாஸ் ரோடு, வார்டு 70 துரைசாமி நகர் மற்றும் வானமாமலை நகர் பகுதியில் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. இவை சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிவதுடன் வாகன ஓட்டிகளையும் நடந்து செல்லும் பொதுமக்களையும் தொடர்ந்து துரத்தி சென்று அச்சுறுத்துவதோடு சிலரை கடித்து குதறுகிறது.எனவே இதுகுறித்து தீர்வுக்காண மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வருமா?