புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவில் ரெகுநாதபுரம் வளர்ந்து வரும் கிராம பகுதியாக உள்ளது. இப்பகுதியில் போலீஸ் நிலையம், அரசு கல்லூரி, தனியார் கல்லூரி உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. விவசாயம் நிறைந்த பகுதியாகவும் உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியும் உள்ளது. ஆனால் புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு கறம்பக்குடியில் மட்டுமே உள்ளது. ரெகுநாதபுரம் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதி விவசாயிகள் கூட்டுறவு கடன் மற்றும் விவசாயிகளுக்கான சலுகைகள் பெற கறம்பக்குடிக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே ரெகுநாதபுரத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி கிளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.