ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள்

Update: 2025-02-02 13:06 GMT

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டியில் நங்காஞ்சி ஆற்றில் தற்போது அனைத்து இடங்களிலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து முட்புதர்களாக காட்சியளிக்கின்றது. இதனால் மழை காலங்களில் ஆற்றில் தண்ணீர் வந்தாலும் கடந்து செல்லாமல் அதே இடத்தில் தேங்கி நிற்கின்றது. தற்போது முட்புதர்கள் அதிகம் காணப்படுவதால் மழை நீரும், சாக்கடை நீரும் தேங்கி நிற்கின்றது. இதனால் கொசு உற்பத்தி அதிகமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அரவக்குறிச்சி நங்காஞ்சி ஆற்றுப்பகுதிகளில் அடர்ந்து காணப்படும் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்