பெரம்பலூர் மாவட்டம், நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள ஏரியில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் மழை பெய்யும் போது இந்த ஏரியில் தேங்கி நிற்கும் மழை நீரில் குப்பைகள் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்றிவிட்டு, மழைநீரை சேகரிக்கும் வகையில், ஏரியை தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.