திறந்து கிடக்கும் தொட்டி

Update: 2025-02-02 12:08 GMT

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கல்லாடிப்பட்டி சத்திரதில் இருந்து முக்கண்ணாமலைப்பட்டி கிராமத்திற்கு செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் காவிரி குடிநீர் குழாய் செல்கிறது. இந்த காவிரி குடிநீர் குழாயில் ஏர்வால்வு பகுதியில் தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தொட்டி சிமெண்டு சிலாப்கள் கொண்டு மூலப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலை வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் சாலை ஓரத்தில் தொட்டியிருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்