ஊட்டியை அடுத்த மஞ்சூரில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் காட்டெருமைகள் அதிகளவில் சுற்றித்திரிகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அவர்களால் பாதுகாப்பாக வெளியே நடமாட முடியவில்லை. எனவே அசம்பாவித சம்பவங்கள் ஏதேனும் ஏற்படும் முன்பு அங்கு காட்டெருமைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.