மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சியில் நீரோடையின் குறுக்கே கிட்டம்பாளையம் செல்லும் சாலையில் தரைப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில் அந்த ஓடையில் தண்ணீர் அதிகமாக செல்வதால், அந்த தரைப்பாலம் மூழ்கி விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அங்கு உயர்மட்ட பாலம் அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.