சூலூர் அருகே முத்துக்கவுண்டன்புதூரில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவில் வீதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொது கழிப்பிட வசதி இல்லை. இதனால் அங்குள்ள ரெயில் நிலையம் அருகே உள்ள பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாக அந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதில் பெண்கள் கடும் அவதிப்படுகின்றனர். எனவே அந்த பகுதியில் பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.