புதிதாக போடப்பட்ட தார்சாலை சேதம்

Update: 2025-01-26 18:33 GMT

திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் மேக்குடியில் இருந்து கோலார்பட்டி கிராமத்திற்கு நடுப்பட்டி வழியாக செல்லும் சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புதிய தார்சாலையாக போடப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளிலேயே சாலையின் மேற்பகுதியில் உள்ள தார், ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை சாலையை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் அவ்வழியே செல்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே மேக்குடியில் இருந்து நடுப்பட்டி வழியாக கோலார்பட்டிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்