சிதம்பரம் பஸ் நிலையம், அண்ணாமலை நகா் செல்லும் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவைகள் இரவு நேரத்தில் சாலையில் படுத்து கிடப்பதால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.