புதுக்கோட்டை மாவட்டம், காரையூரிலிருந்து ஆலம்பட்டி, கீழத்தானியம் வழியாக மேலத்தானியம் செல்லும் தார்சாலை உள்ளது. இந்த தார் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேலமரங்கள் வளர்ந்து உள்ளதால் இவ்வழியாக செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சாலையோரம் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
