பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா சாத்தனூர் கிராமத்தில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர் காலத்து பாசன ஏரி உள்ளது. இந்த ஏரி முறையாக பராமரிக்கப்படாத காரணத்தினால் தற்போது பாசன ஏரியாக இல்லாததோடு சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது. ஏரி போதிய அளவிற்கு ஆழப்படுத்தப்படவும் இல்லை. மேற்கூரிய காரணங்களால் நீர்சேமிக்கும் பரப்பு குறைந்துள்ளதோடு ஏரியை பயன்படுத்த முடியாத சூழலும் உள்ளது. எனவே கோடைக் காலத்திற்குள் உரிய நடவடிக்கைகளை செய்து ஏரியை சீரமைக்க வேண்டும்.