பள்ளபாளையம் அருகே சிறுமுகை நால்ரோடு பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை. அங்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் நிழற்குடை இல்லாததால் மழை, வெயிலில் அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பெண்கள், முதியவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். எனவே அங்கு நிழற்குடை வசதி ஏற்படுத்தி தருவதோடு கழிப்பிட வசதியும் ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.