மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி ஊராட்சி தொட்டதாசனூர் கிராமத்தில் மயான வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்களை அங்குள்ள பள்ளம் பகுதியில் பொதுமக்கள் அடக்கம் செய்து வந்தனர். தற்போது அங்கும் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடவசதி இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, பொது மயானம் அமைத்து தர வேண்டும்.