
திருப்பூர் மாநகரில் கடந்த சில நாட்களாக சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. மாடுகள் கூட்டமாக செல்வதால் சில இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், மாடுகள் திடீரென சாலையின் நடுவே வருவதால் விபத்து ஏற்படும் அபாயமும் நிகழ்கிறது. எனவே சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.