ஓமலூர் பஸ் நிலையம் அருகே மேச்சேரி பிரிவு ரோட்டில் ரெயில்வே கேட் உள்ளது. இது மேச்சேரி, மேட்டூர் செல்லும் பிரதான சாலை என்பதால் இரவு நேரங்களில் அதிகமான வாகனங்கள் சென்று வரும். இந்த இடத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே இந்த பகுதியில் விரைந்து உயர் கோபுர மின்விளக்குகள் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.