கொளத்தூர் காவேரிபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி வளாகத்தின் நுழைவு பாதையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் பள்ளி வளாகத்திலும், அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே மாணவர்கள் அச்சத்துடனேயே பள்ளிக்கு சென்று வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி பள்ளி நுழைவு பாதையில் உள்ள செடி, கொடிகளை அப்புறப்படுத்த வேண்டும் என்பதே மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.