சுரங்கப்பாதை அமைக்கப்படுமா?

Update: 2025-01-19 13:35 GMT
திருச்சி மாவட்டம். மணப்பாறை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட நொச்சி மேடு, தீராம்பட்டி, மஞ்சம் பட்டி ஆகிய ஊர்களில் சுமார் 5000-க்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றார்கள். இதில் பெரும்பாலான மக்கள் விவசாயக் கூலி தொழிலாளர்களாகவும், கட்டிட தொழிலாளர்களாகவும். கால்நடை வளர்ப்போவா்களாகவும் உள்ளனர். கல்லூரி மாணவ மாணவிகள் அரசு வேலைக்கு செல்வோர் ஆகியோர் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருச்சி திண்டுக்கல் புறவழிச்சாலை வழியாக சாலையை கடந்து மணப்பாறை சென்று அங்கிருந்து வேலைக்கு சென்று வருகின்றனர். சாலையை கடக்கும் போது அதிவேகமாக வரும் வாகனங்களால் ஏற்படும் விபத்துகளால் ஏராளமான மக்கள் உயிரிழந்து உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் திருச்சி-திண்டுக்கல் புறவழிச்சாலையில் சுரங்கப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்