கரூர் மாவட்டம் கோம்புப்பாளையம் ஊராட்சி சார்பில் நடையனூர் பகுதியில் மக்கும் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கும் கீற்று கொட்டகை போடப்பட்டது .கோம்புப்பாளையம் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கள் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்கள் பிரித்து வாங்கப்பட்டு உரம் தயாரிக்கும் கொட்டகைக்கு மக்கும் குப்பைகளை கொண்டு வந்து அந்த குப்பைகளிலிருந்து உரம் தயாரிப்பதற்காக அங்கு கொட்டகை போடப்பட்டுள்ளது. இங்கு உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த கொட்டகையில் குப்பைகள் மூலம் உரம் தயாரிக்கும் பணி நடைபெறாததால் குப்பை தயாரிக்கும் கீற்று கொட்டகை பழுதடைந்து உள்ளது. மேலும் கொட்டகையை சுற்றி ஏராளமான செடி ,கொடிகள் முளைத்து உள்ளது. எனவே உரம் தயாரிக்கும் கொட்டகை பயனற்று வருகிறது. எனவே ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து உரம் தயாரிக்கும் கொட்டகை அருகே முளைத்துள்ள செடி கொடிகளை அகற்றி கொட்டகையை சீரமைத்து மீண்டும் உரம் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.