கும்பகோணம் ஹரிதா நகர் பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாலையில் நடந்து செல்பவர்களை விரட்டி சென்று கடிக்கின்றன. வாகனங்களை துரத்தி செல்வதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் நாய்களால் அப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.