ஆதார் மையம் அமைக்கப்படுமா?

Update: 2025-01-12 14:32 GMT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, அரசமலை சுற்றுவட்டார கிராமங்களான நெறிஞ்சிக்குடி, நல்லூர், கூடலூர், வாழைக்குறிச்சி, நெறிஞ்சிக்குடி, அரசமலை ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட சுற்றுவட்டார மக்கள் புதிதாக ஆதார் எடுத்தல், பெயர், முகவரி திருத்தம் செய்தல் மற்றும் செல்போன் நம்பர் பதிவு ஏற்றுதல் போன்ற பணிகளுக்கு சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னமராவதிக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அரசமலை சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் அரசமலையில் ஆதார் சேவை மையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்