பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட நான்கு ரோடு பகுதியில் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் இலவச சுகாதார கழிப்பிடம் இல்லாமல் உள்ளதால் மக்கள் பொது இடங்களில் இயற்கை உபாதை கழிக்கின்றனர். இதனால் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.