நாஞ்சிக்கோட்டை சாலை வேலாயுதம் மன்னையார்நகரில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை கழிவுநீர் சாக்கடைக்குள் உருண்டு,புரண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துவிடுகின்றன. இதனால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகின்றனர். சாலையில் அங்கும்,இங்கும் ஓடுவதால் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.