குரங்குகள் தொல்லை

Update: 2025-01-12 11:39 GMT

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். சமீப நாட்களாக இந்த கேவிலில் குரங்குகள் தொல்லை அதிகளவில் உள்ளது. பக்தர்கள் சாமி தரிசனம் முடிந்து வரும்போது பிரசாத தட்டுகளை குரங்குகள் பறிக்கின்றன. இதுதவிர சிறுவர்களிடம் இருக்கும் தின்பண்டங்களையும் பறிக்கின்றன. தராவிட்டால் விரட்டுகின்றன. இதனால் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்