முத்துப்பேட்டை தாலுகா தெற்குகாடு கோசாகுளத்தெருவில் பட்டரைகுளம் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி இருப்பதால் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் வாய்க்கால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. வாய்க்காலில் உள்ள நீரும் மாசடைகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலில் வளர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.