திண்டிவனம் ஜெயபுரம் பஸ் நிலையம் அருகே கூட்டுரோட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர்கோபுர மின் விளக்கு பழுதுடைந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.