சிதம்பரம் உசுப்பூர், மகாவீர் நகர், இந்திரா நகர், நான் முனிசிபல் உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை அங்குள்ள சேற்றில் புரண்டுவிட்டு அப்படியே தெருக்களில் செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.