உத்தமபாளையம் பகுதியில் கொசுத்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் இரவில் பொதுமக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர். மேலும் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே கொசுப்புழுக்களை அழிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.