கரூர் மாவட்டம், புன்செய் தோட்டக்குறிச்சி பேரூராட்சி, தோட்டக்குறிச்சி முத்து ராஜா பகுதியில் உள்ள வாய்காலில் ஏராளமான ஆகாய தாமரைகள் முளைத்துள்ளது. இதனால் இந்த வாய்க்காலில் தண்ணீரி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.