விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தெருநாய்களின் தொல்லை அதிகளவில் உள்ளது. நாய்கள் தொல்லையால் பெண்கள், முதியோர்கள், சிறுவர் சிறுமிகள் வெளியே சென்று வர மிகவும் அச்சமடைகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை துரத்தி சென்று விபத்துகளை ஏற்படுத்துகிறது. நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?