வெள்ளாற்றை தூய்மைபடுத்த கோரிக்கை

Update: 2025-01-05 12:37 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தை அடுத்த திருவுடையார்பட்டி திரிபுரசுந்தரி அம்மாள் கோவில் தென்புறம் வெள்ளாறு ஓடுகிறது. இந்த ஆற்றில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தும் வந்தனர். இந்த நிலையில் தற்போது இந்த வெள்ளாறு தூர்வாரப்படாமல் புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் தற்போது இந்த ஆற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, இந்த ஆற்றை தூர்வாரி தூய்மை படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்