திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள எரகுடி ரெட்டியார் தெருவில் சாலையோரம் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு பாதுகாப்பு இன்றி உள்ளதால், இதனால் இந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள் இந்த கிணற்றில் தவறி விழும் நிலை உள்ளது. மேலும் இரவு நேரத்தில் வாகனங்கள் இந்த கிணற்றில் பாய்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.