அம்பை நகராட்சி 11-வது வார்டு மணலோடை தெருவில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பேவர்பிளாக் சாலையை சீரமைக்காமல் கிடப்பில் போட்டதாக உதயன் என்பவர் அனுப்பிய பதிவு ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சேதமடைந்த சாலை சீரமைக்கப்பட்டது. கோரிக்கை நிறைவேற உறுதுணையாக இருந்த ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும் அவர் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.