சங்கராபுரம் உழவர் சந்தையின் முன்பு நுழைவுவாயிலில் பெயர் பலகை அமைக்கப்படாமல் இருந்தது. இதனால் வெளியூரில் இருந்து வரும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சந்தை இருப்பது தெரியாமல் கடும் அவதியடைந்து வந்தனர். இது குறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதையடுத்து சந்தை முன்பு பெயர் பலகை மீண்டும் அமைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.