சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சியில் கே.ஆர்.எம்.நகரில் உள்ள தெருக்களில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இவைகளால் வாகன விபத்து ஏற்படுவது மட்டுமின்றி அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே அதிகாரிகள் விரைந்து பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.