பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திாிக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகளும், அவர்களது உறவினர்களும் வந்து செல்கின்றனர். இவர்களின் வசதிக்காக ஆஸ்பத்திரி வளாகத்தில் 5 கழிப்பறைகள் கட்டப்பட்டன. ஆனால் இவை சரியான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு்ள்ளது. எனவே கழிப்பறைகளை பராமரித்து நோயாளிகளின் பயன்பாட்டு்க்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.