மதுரை நகர் அண்ணா பஸ் நிலையம் அருகே ஜவஹர் தெருவில் பல வாரங்களாகவே சில தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரங்களில் அப்பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இடையே திருட்டு அச்சம் எழுந்துள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கை சரிசெய்து தர நடவடிக்கை எடுக்க முன் வருவார்களா?