பொதுமக்கள் அவதி

Update: 2024-12-29 16:57 GMT

மதுரை நகர் ஜெய்ஹிந்த்புரம் பகுதி சுந்தரராஜபுரம் அருகே உள்ள லெட்சுமிபுரம், எச்.எச்.ரோடு, கணேசன் ரோடு பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள்  தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும்  டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்  கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்