திண்டுக்கல் நாகல்நகர் சந்தைரோடு, வேடப்பட்டி, பாரதிபுரம் ஆகிய பகுதிகளில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் கடிப்பதற்கு துரத்துவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.