விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இவை சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று அச்சுறுத்துவதோடு சில வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்தை ஏற்படுத்துகின்றது. எனவே நகர் பகுதியில் சுற்றத்திரியும் நாய்களை பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.