சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கொள்ளுக்காடு ஊராட்சி அம்பேத்கர் பகுதியில் சுடுகாடு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் முறையான பராமரிப்பின்றி இருக்கிறது. கட்டிடத்தின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் கட்டிடத்தில் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை உருவாகி இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் புதிதாக கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுப்பார்களா?