புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா வடகாட்டில் இருந்து ஆவணம் கைகாட்டி செல்லும் வழியில் நெடுஞ்சாலை ஓரமாக பட்டுப்போன பனைமரம் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது. இந்த பட்டுப்போன பனைமரம் ஒடிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் ஏதேனும் வாகனங்களில் விழுந்தால் உயிர் இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுப்போன பனைமரத்தை உடனடியாக அ்ங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.