ஏரியை சீரமைக்க கோரிக்கை

Update: 2024-12-29 11:23 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்l குரும்பாபாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள புது ஏரியானது குளிப்பதற்கும், கால்நடைகளின் நீராதாரமாகவும் உள்ளது. காடுகளில் இருந்து வரும் நீர் புது ஏரியை நிரப்பி பிறகு மருதையாற்றுக்குச் செல்கிறது. கடந்த 2021-ம் ஆண்டு பருவமழைக் காலத்தில் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடைகால் பகுதி சேதமடைந்து நீர் அனைத்தும் வெளியேறிவிட்டது. அதை சீரமைக்க பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையைம் எடுக்கப்படவில்லை. சமீபத்திய பெய்த மழையிலும் நீரை தேக்கி வைக்க முடியாமல் போனதோடு மேலும் கடைக்கால் சேதமடைந்தது. இது தொடர்பாக உரிய ஆய்வு மேற்கொண்டு நிதி ஒதுக்கி விரைந்து கடைகால் பகுதியை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்